பொங்கல் விழா கொண்டாட்டம்
பொங்கல் விழா கொண்டாட்டம் நம் பள்ளியில் 11.1.24 (வியாழன்) அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக முனைவர் நா.உமா மகேஸ்வரி தமிழ்த் துறைத் தலைவர்
ஷங்கர்லால் சுந்தர் பாய் ஷசுன் ஜெயின்
மகளிர் கல்லூரி அவர்கள் விழாவினை தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சியில் பொங்கல் சிறப்பு பாடல், நடனம், மற்றும் வில்லுப் பாட்டு போன்றவைகள் மாணவர்களால் நடத்தப்பட்டன. மேலும்கல்லூரிப் பயிலக்கூடிய பல மாணவர்களால் உருவாக்கப்பட்ட “மாணவக் கலைஞர்கள் அமைப்பு”மூலம் நாட்டுப்புற நிகழ்த்து கலைகள் மாணவக் கலைஞர்களால் நடத்தப்பட்டது.அதுமட்டுமல்லாது பாரம்பரிய முறையில் பள்ளியில் சந்தை வெகு சிறப்பாக நடைபெற்றதுஅதில் மாணவர்கள் பொழுது போக்கு விளையாட்டுகளையும் விளையாண்டு மகிழ்ந்தார்கள்.நமது பள்ளியில் சமத்துவப் பொங்கல் வைக்கப்பட்டு.சூரிய வழிபாடும் நடைபெற்றது.அனைவரும் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு மகிழ்ந்தார்கள்.